Wednesday

முறுக்கிய மீசை ... தொலை நோக்கு பார்வை ... சுற்றி உள்ள சுயநல தவளைகளின் ஈனஸ்வரத்தை கேளாதிருக்க ஓர் முண்டாசு ... பெண்ணை நாட்டின் கண்ணாக காணும் கண்கள் ...ஜாதிகளின் ஏற்ற தாழ்வை எதிர்க்கும் வீரம் ... தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அளிக்க கூறிய உத்வேக்ம் .. ஆடுவோமே பல்லு பாடுவோமே , ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ,,, - அன்றே மார் தட்டி கூறிய அவன் நம்பிக்கை ... தேவை இவை தான் இன்று நம் இளைஞர்களுக்கு .. முண்டாசு கவிஞரே ... முடிந்தால் அனுப்பி வையுங்கள் பூலோகத்திற்கு ... என்றேன் .. முட்டாள் ... அதை என் பாட்டிலே பொதிந்து விட்டு தானடா பரலோகம் சென்றேன் ... வைத்து பூஜை செய்கிறாயா .? என் கவிதைகளை. ?.... என்றென்னை திருப்பி கேட்டான் என் தலைவன் ... அவை கவிதைகள் அல்ல .. அவன் உயிரின் உணர்ச்சிப் பிழம்பு .... என்றைய இளைஞர்களுக்கும் தேவையான எரிமலைக் குழம்பு ... இந்த முட்டாளின் கவிதை என்ற கொடூரத்தை பார்த்தது போதும் நீ கிளம்பு ... என் தலைவனின் உணர்ச்சி பிழம்பை நீ படித்து விரும்பு

Friday

திருமந்திரம்

‘‘ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றி நின்றே பல ஊழிகள் கண்டேனே’’

‘‘எனது அறிவு எங்கேயெல்லாமோ, ஓடி ஓடித் திரிந்து கொண்டிருந்தது. முயற்சி செய்து அதை என்னோடு நிற்க வைத்தேன். என்னோடு ஒன்றாகிப் போன அறிவை, எனது உள்ளே செலுத்தி நோக்கினேன். பரம்பொருள் அனுபவம் கிடைத்தது. அத்துடன் திருவருளின் தன்மையும் புலப்பட்டது. எனது உலக வாழ்க்கையும், ஆன்ம வாழ்க்கையும், பயனுள்ள வகையில் நடப்பதற்கான உண்மை அறிவும் என்னுள்பட்டது. அந்த அறிவு, திருவருளால் நான் பெற்ற அறிவு. அது இறைவனிடமிருந்து வந்தது. ஆகையாலே, உணர்ந்தேன் என்று சொல்வதே பொருத்தமாகும். இது எனக்கு, நினைத்த மாத்திரத்தில் கிடைத்து விடவில்லை. இந்த உணர்வினைப் பெறுவதற்கு நான் பல பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தது!’’ என்கிறார்.