Saturday

கமல்ஹாசன்

''மனித வணக்கம்'' - கமல்ஹாசன்

மனித வணக்கம்.தாயே,

என் தாயே!நான்உரித்த தோலே

அறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,

என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ

உதறிய மைபடர்ந்தது கவிதைகளாய்

இன்றுபுரியாத வரியிருப்பின் கேள்!

பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!

என் தகப்பனின் சாயல்

நீஅச்சகம்தான் ஒன்றிங்கேஅர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!

தோழி, தொலைந்தே போனாயேதுணை தேடிப் போனாயோ?மனைவி,

ஓ காதலி!நீ தாண்டாப் படியெல்லாம்

நான் தாண்டக் குமைந்திடுவாய்சாத்திரத்தின்

சூட்சமங்கள் புரியும் வரை.

மகனே, ஓ மகனே!என் விந்திட்ட விதையேசெடியே,

மரமே, காடேமறு பிறப்பேமரண செளகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!நீயும் என் காதலியே

எனதம்மை போல ..எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?இல்லைகாதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!

நீ செய்த நட்பெல்லாம்

நான் செய்த அன்பின் பலன்இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!

உன் ஆடையெனும் அகந்தையுடன்

எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.

நீ உடுத்தி நிற்கும் ஆடைகளேஉனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்நீ துவைத்த துணிக் கடைகள்நிர்மூலமாகி விடும்நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!

என் சமகால சகவாசி,வாசி!

புரிந்தால் புன்னகை செய்.

புதிரென்றால் புருவம் உயர்த்து.

பிதற்றல் எனத் தோன்றின்பிழையும் திருத்து.

எனது கவி உனதும்தான்.ஆம்,நான் உன் வரியில் நான் தெரிவேன்.

திருமந்திரம்

"அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சு மடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சு மடக்கில் அசேதன மாமேன்றிட்டு
அஞ்சு மடக்கா அறிவறிந் தேனே"

மனதை ஒருநிலை படுத்த ஐந்து புலன்களையும் அடக்க (கட்டுப்படுத்த) வேண்டும் என்று கூறுவர் அறிவு இல்லாதவர். புலன்கள் ஐந்தயும் அடக்கி வாழ்ந்து பிறகு இறந்தவரும் இவ்வுலகில் இல்லை. இப்படி இருக்க எவரேனும் புலன்களை அடக்க நினைத்தால் அது உடற்துன்பத்திற்கே (சேதம் ) கொண்டு செல்லும். ஆதலால் புலன்களை அடக்க நினைக்காமல் புலன்கள் ஊக்குவிக்கும் செயல்களை சீரமைத்து நல்லறிவு பெற வேண்டும்

திருமந்திரம்

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.

"ஐந்தில் அமர்ந்து = ஐம்பூதங்கள் என்பார் சிலர். "சிவயநம" என்போருமுண்டு.எல்லா உயிர்களின்மேல் செலுத்தும் அன்பால் ஒருவருக்கு உண்மையறிவு உண்டாகும். அதனால் அடக்கமுடைமை உண்டாகும். இப்பண்புகளிடமாக நின்று அருளுபவன் சிவன். அதனால் அப்பண்புகளே சிவம் எனக் கூறப்பட்டன. அதுபோல கணவனும் மனைவியும் புணரும்பொழுது சிவசிந்தனையுடன் கூட அதில் கிட்டும் சிற்றின்பமும் சிவமே. ஊழிக்காலத்துக்குப்பின் உலகைத் தோற்றுவிக்கும் பெரும் பொருள் சிவனே. அவ்வாறு தோற்றுவித்து, நிலை நிறுத்திப் பின் பேரொடுக்கம் செய்யும் ஊழிப்பெருமானும் சிவனே.ஆக, அன்பும் சிவமும் இரண்டறக் கலந்து நிற்பதால் அன்பே சிவமாம்.

பாரதி

ஞானப் புலவன் நல்லா சிரியன்ஈனச்
சாதிகள் இடுப்பை ஒடித்தவன்கானப்
பெருங்குயில் கற்பனைச் சிகரம்
ஆயிரம் ஆண்டின் அதிசயமாகஒருமுறை
பிறக்கும் உயர்ந்த பிறப்புசொல்லச் சொல்லச்
சுவைமிகும் பெயரைஎண்ண எண்ண இனித்திடும் பெயரைபிறந்தநாள் கண்டு பேசி மகிழ்கிறோம்இறந்த நாள் கண்டு நாம் எண்ணி யழுகிறோம்காலத்தாலவன் கல்வெட் டாயினான்
கன்னித் தமிழ் அவன் காவலில் வாழ்ந்தது
அன்புத் தமிழே அன்னை பாரதமே
இன்பக் கவிஞனை எண்ணுவாய் நிதமே!-
கண்ணதாசன்.
வாழ்க பாரதி நாமம் ! வாழிய வாழியவே !!

Friday

திருமந்திரம்

மந்திரத்து பொருளதனை சத்தியமாய் உரைத்தீரே
உந்திறத்தை கண்டவுடன் மெய்யதுவுஞ் சிலிர்கின்றேன்
தந்திரத்தால் அன்பதுவே சிவமென்றா லுண்மையல்ல
சந்திரத்து நாடியதில் களித்தநிலை தானன்பே

அன்பதனை உயிரிடத்து காட்டலுஞ் சிவமல்ல
என்பதுவு முருகிடினு பிடிதளரா பாசமது
துன்பத்திற் தளராது சிவனவனை நாடிவரின்
இன்பநிலை யதுவாமே அன்பதுவுஞ் சிவமாமே

திருமந்திரம்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே

"எனக்கு மிகவும் பிடித்த செய்யுள்."

இறைவுணர்வு என்பதே அன்புணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும்செய்ய வேண்டும்.அருள்நெறி என்பது நெறியின் அன்பு நெறியின் அடியாக தோன்றுவதாகும்.எனவே தான் ''அருள் என்னும் அன்பு ஈன் குழுவி'' என்றார் வள்ளுவர்.உலக உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும்.அருள் நெறி நின்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமயவாழ்வு வாழ்கிறோம் எனில் அதுசமுதாய வாழ்வுடன் இணைந்தாக அமைய வேண்டும். "

திருமந்திரம்

மனத்திற்கு மட்டுமெ இறைவனை உணரும் சக்தி உள்ளது என்பதை....."

முகத்திற்கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்என்ல் சொல்லுமாறு எங்கனே "

எப்படி ஒரு தாய் தன் கணவனோடு (மணாளன்) புணர்ந்த சுகத்தை தன் மகளுக்கு எடுத்துரைக்க முடியாதோ அதைப்போல முகத்தில் உள்ள கண்ணைக் கொண்டு இறைவனை காண இயலாது. அகக்கண்ணை (மனம்) கொண்டு தான் அவனை உணர முடியும்.
திருமந்திரம் என்னும் ஒப்பற்ற சித்தாந்த நூல் ஒன்பது பகுதிகளை கொண்டுள்ளது .ஒவ்வொரு பகுதிக்கும் "தந்திரம் " என்று பெயர் .ஆகா , திருமூலர் மந்திரமும் அதனுள் தந்திரங்களும் மருந்துமாக மூவாயிரம் பாடல்களை செய்துள்ளார்.

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்மெள்ளக்
குடைந்துநின் றாடார் வினைகெடப்பள்ளம்
மேடும் பறந்து திரிவரேகள்ளமன முடைக் கல்வியில் லோரே "

சமுதாய வளத்தையும், சமுதாய ஒழுங்கையும் பாதுகாத்துப் பயனாகிய இன்பம் துய்க்கும் பக்குவத்தை மனம் பெற்றுக் கொள்ளவேண்டும். இதையெல்லம் விட முக்கியமாக மனம் தன்னையே நன்கு பூரணமாக அறிந்து கொண்டாக வேண்டும். ஏனெனில் , எல்லாமே மனத்திற்குள் இருந்து தான் வரவேண்டும். மனத்தின் மகத்துவத்தை உணராதவர் அறிவில்லாதவர்களே. அவர்கள், தனக்கும் சமுதாயத்துக்கும் துன்பம் வீளைவித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இன்பமும் , அமைதியும் மனதிற்குள்ளிருந்து தான் வர வேண்டும் என அறியாமல் எங்கெல்லாமோ அவற்றைத் தேடி அலைந்து துன்புறுவார்கள்.

Monday

எப்படி பெற்ற தாய் மீது சிறு துளி பாசம் ஒட்டிக்கொண்டிருக்குமோ..அதைப் போல தாய்மொழி மீது ஒரு பிடிப்பு இருக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான்...எல்லா நாட்டிலும் அந்தந்த மொழிக்கென்று ஒரு அங்கீகாரம் இன்றும் இருந்து வருகிறது.அமெரிக்கன் ப்ரென்ச் கற்றால் கூட ஆங்கிலம் தனது முதுகெலும்பு என்பதை அவன் மறப்பதில்லை.ஆனால் இங்கு நிலையோ தலைகீழ்...தமிழ் வழியில் கற்பது தலைக்குனிவு என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது..இதை மறுப்பவர் எவரெனும் உண்டா...?கடந்த 5 ஆண்டு கணக்கெடுப்பு சொல்கிறது..தமிழ் வழிக் கல்வி சேர்க்கைவீதம் வேகமாக குறைந்து வருகிறது..10ஆங்கில வழி பள்ளிகள் புதிதாக தொடங்கப்படும் நேரத்தில் 20 தமிழ் வழிப் பள்ளிகள் மூடப்படுகிறது..இன்று நம் சந்ததியினரில் பலருக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியாது...இன்றே இப்படி என்றால் நாளை........?என் தாத்தாவுக்கு தமிழ் இலக்கியம் எழுதத் தெரியும்என் அப்பாவுக்கு தமிழ் இலக்கியம் படிக்கத் தெரியும்எனக்கு தமிழில் பேசத் தெரியும்..நாளைஎன் பையனுக்கு தமிழ் என்றால் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்க மட்டுமே தெரியும்...நாளைய பொழுதுக்கான உணவை எறும்பு இன்றே சேமிக்கிறது..ஒரு எறும்புக்கு நாளைய வாழ்வின் பொருள் புரிந்திருக்கிறது..ஆனால் நமக்கு.....?சற்றே சிந்திப்போம்....

புதிய ஆத்தி சூடி

அச்சம் தவிர்.
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி.
ஈகை திறன்.
உடலினை உறுதிசெய்.
5 ஊண்மிக விரும்பு.
எண்ணுவ துயர்வு.
ஏறுபோல் நட.
ஐம்பொறி ஆட்சிகொள்.
ஒற்றுமை வலிமையாம்.
10 ஓய்த லொழி.
ஔடதங் குறை.
கற்ற தொழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல்.
15 கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமிர்ந்துநில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு.
கேட்டிலும் துணிந்துநில்.
20 கைத்தொழில் போற்று.
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டு வாழ்.
கவ்வியதை விடேல்.
சரித்திரத் தேர்ச்சிகொள்.
25 சாவதற்கு அஞ்சேல்.
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று.
30 செய்வது துணிந்து செய்.
சேர்க்கை அழியேல்.
சைகையிற் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்.
சோதிடந் தனையிகழ்.
35 சௌரியந் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று.
ஞிமிரென இன்புறு.
ஞெகிழ்வத தருளின்.
40 ஞேயங் காத்தல் செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்றுவாழ்.
தீயோர்க்கு அஞ்சேல்.
45 துன்பம் மறந்திடு.
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என்றுணர்.
தேசத்தைக் காத்தல்செய்.
தையலை உயர்வு செய்.
50 தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியிற் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினைசெய்.
55 நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்நெற்றி சுருக்கிடேல்.
60நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
65 பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி யிழந்திடேல்.
70பெரிதினும் பெரிதுகேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
பொய்ம்மை இகழ்.
போர்த்தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
75மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங்கொடேல்.
80மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
85யவனர்போல் முயற்சிகொள்.
யாவரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
90ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொள்.
ரோதனம் தவிர்.
95ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ்.
100(உ)லோகநூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வானநூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு.
105வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.வேதம்
புதுமைசெய்.
வையத் தலைமைகொள்வௌவுதல் நீக்கு.