Saturday

புதிய லேப்டப்: கூகுள் அறிமுகம்

இணையப் பயன்பாடுகள்    மட்டுமின்றி புதிய பல்வேறு வகையில்  இன்று முன்னிலையில் உள்ள கூகுள் நிறுவனம் புதிதாக புதியவகையில் ஒரு லேப்டப்பை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.

இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள்.

Wednesday

கன்சிராம் (இந்திய அரசியலின் ஒரு சகாப்தம்)

கன்சிராம் சுதந்திர இந்தியாவில் அம்பேத்கருக்குப் பின் அடித்தட்டு மக்களுக்காக வாழ்ந்த மாபெரும் அரசியல் தலைவர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலும், சக்கர நாற்காலியிலும் இருந்த அந்த மாபெரும் தலைவர் தம்முடைய 72 ஆம் வயதில் மாயாவதியின் இல்லத்தில் காலமானார். அவருடன் அரசியல் களத்தில் மாறுபடும் இராம் விலாஸ் பாஸ்வான் கூட அவரை “தலித்துகளின் மெசைய்யா” என்றே வர்ணிக்கிறார்.

கன்சிராம் மிகப்பெரிய சொல்லாடல் புரியும் பேச்சாளராக இல்லாவிட்டாலும் சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் பேசும் எளிமையான பேச்சாளர். கன்சிராம் நடைமுறை அரசியலின் இராஜதந்திரியாக விளங்கினார்.