Saturday

Google Body.


Google நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் ஓர் இலவச வசதிதான் Google Body. இதன்மூலம் மனித உடலினுள் இருக்கும் பாகங்களை அறிந்து கொள்ளமுடியும். தசைநார் தொகுதி, எலும்பு தொகுதி, நரம்புத் தொகுதி என விரும்பிய தொகுதிகளை நீக்கியோ அல்லது தோன்றச் சொய்தோ ஆராய முடியும். அத்துடன் ஒவ்வொரு பாகத்துக்கும் உரிய விஞ்ஞானப் பெயர்களையும் அறிந்து கொள்ள முடிவதனால் உயிரியல் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு சேவையாக இருக்கும்.
Google Earth மூலம் உலகின் பாகங்களை ஆராயும் வசதியை அனைவருக்கும் இலவசமாக வழங்கிய Google தற்பொழுது மனித உடலின் பாகங்களை ஆராயும் வசதியினை அதி நவீன 3D தொழினுட்ப வசதியுடன் வழங்கியுள்ளது. Google Chrome உலாவியின் புதிய பதிப்பில் இந்த சேவை சிறப்பாக இயங்கும்.
நீங்களும் இந்த சேவையை பரீட்சிக்க பின்வரும் இணைப்பிற்கு செல்லுங்கள்.
http://bodybrowser.googlelabs.com/body.html

மனதுடன் யுத்தம்

மனம் என்பது விதவிதமான மாயைகளை தோற்றுவிக்கக்கூடியது.அதிலும்,மற்றவர்களிடம் இருந்து தான் வித்தியாசமானவன் என்ற உணர்வை மற்றவரது மனதில் எப்படியாவது விதைக்க அது முயன்று கொண்டே இருக்கும்.ஒரு முறை அத்தகைய உணர்வு ஒருவர் மனதில் புகுந்து விட்டால் அதிலிருந்து எளிதாக யாரும் மீள முடியாது. மனம் உடனே நம்மைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிவிடும்.அதைத் தாண்டி நம் மனதுக்குள் எதுவும் நுழைய முடியாது.ஒவ்வொரு எண்ணமும்,ஒவ்வொரு கருத்தும் நான் என்ற உணர்வுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே,மனதில் நுழைய முடியும்.இயற்கை பற்றிய,இறைவன் பற்றிய கருத்துக்களில் கூட நமக்குப் பிடித்தமானது மட்டுமே நம்மால் ஏற்கப்படும்.யுத்தத்தில் பெரிய யுத்தம்,ஒரு மனிதன் தன மனதுடன் நடத்தும் யுத்தமே.நாம் மனதிடம் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம் என்பதை உணரக் கூட

கொஞ்சம் அசிங்கமான விஷயம் ஒண்ணு சொல்லணும். யாரும் கோவிச்சுக்கக்கூடாது. இதப்போய் சொல்லவந்துட்டான் என்று திட்டக்கூடாது. உங்ககிட்ட சொல்லாம யாருட்ட போய் முட்டிக்கிறது?
வேற ஒண்ணும் இல்லீங்க...நம்ம ஊர்ல பைக்குல ஹெல்மட் இல்லாம போறதுண்டா? அப்படி போனீங்கன்னா உயிருக்குப் பயம் அது இதுன்னு உங்களைப் பயமுறுத்த இதை எழுதலை. இன்னோரு பயங்கரத்தைப் பற்றிச் சொல்லணும்.


உங்களுக்கு முன்னால் போறவர் தீடீர்னு திரும்பி எச்சில் துப்புவார் பாருங்க..அப்போ தெரியும் ஹெல்மட் மகிமை. அதே மாதிரி, நின்று கொண்டிருக்கும் பேருந்தைத் தாண்டிப் போக வேண்டிய நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் போக வேண்டியதுள்ளது - எந்த நேரத்தில் எந்தப் புண்ணியவான்(வதி) உள்ளேயிருந்து அபிஷேக விழா நடத்துவார்களோ, யார் கண்டது!

Wednesday

காலக்கண்ணாடி



2008

* தமிழகத்தில் மின்னணு கருவிகள் (electronic appliances) வாங்கினால் தமிழிலேயே நம் மக்களுக்கு எளிதாகப் புரியும் இடைமுகத்துடன் (interface) கிடைக்கின்றன.
* கணினியில் பயன்படுத்தத் தேவைப்படும் மென்பொருட்கள் அனைத்தும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவர் கூட பயன்படுத்தும் வகையில் கிடைக்கின்றன.
* தமிழ் மாணவர் எவரும் ஆங்கில அறிவுக் குறைவால் வாய்ப்பை இழக்கும் நிலை மாற ஆரம்பிக்கிறது.

2010

* தமிழில் அறிவுக் கருவூலங்கள் (encyclopedia) பெருகி, யாரும் தமிழ் வழியே உலகின் அறிவுச் செல்வங்களை அணுகலாம் என்ற நிலைமை.
* தமிழக அரசுப் பணிகள் யாவும் தமிழிலேயே நடைபெறுகின்றன. தகவல் இணைப்புகளால் அரசு அலுவல்களில் கால தாமதம், ஊழல் புரிவதற்கான வாய்ப்புகள் ஒழிந்து போகின்றன.
* கடலுக்குப் போகும் மீனவர்களும், பயிர் போடும் விவசாயிகளும் தமக்கு வேண்டிய விபரங்களைத் திரட்டவும், தமது அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
* வீட்டு செலவுக் கணக்குக்கும், கடைகளில் விற்பனைக் கணக்கும், செய்தித்தாள் போடுபவரின் கணக்கும், பால் கணக்கும் கணினிகளின் மூலம் செய்து கொள்ள முடிகிறது.
* தமிழ் மருத்தவர்களும், தமிழ் பொறியாளர்களும், தமிழ் வணிகர்களும், வழக்கறிஞர்களும் தமது ஆவணங்களையும் (documents), குறிப்புகளையும் (records) முழுமையாகப் பதிவு செய்து தரமான சேவை வழங்க முடிகிறது.
* படித்த இளைஞர்கள் யாவருக்கும் நமது சமூகத்திலேயே உலகத் தரத்திலான வேலை வாய்ப்புகளும், ஊதியமும் கிடைக்கிறது.

2020

* ஆப்பிளின் iPod போல, மைக்ரோசாப்டின் விண்டோசு போல், லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகையே மாற்றி அமைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு (inventions) தமிழகம் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது.
* மரபணு ஆராய்ச்சிகள், இயற்பியலின் முன்னணி பணிகள் தமிழகத்தின் பல்கலைக் கழகங்களில் தமிழிலேயே நடைபெறுகிறது.
* உயர்தர திரைப்படங்கள், உலகே வியக்கும் கலைப் படைப்புகள் தமிழகத்தில் உருவாகின்றன.
* தரமான சாலைகள், உயர்வான பொதுச் சேவைகள், எல்லோருக்கும் மருத்துவ வசதி, இயலாதவருக்கு சமூக ஆதரவு என்று எல்லோரும் எல்லாமும் பெற்றுள்ள சமூகமாக தமிழகம் உலகுக்கே வழி காட்டுகிறது.

தத்துவம்


“நான் மிருகத்தனமாய் இருந்து

என்னை முறியடிக்க நீங்களும்

மிருகத்தனமான முறையையே உபயோகித்தால்

நீங்களும் என்னைப்போலவே

மிருகமாகி விடுகிறீர்கள்.”
...ஜெ.கிருஷ்ணமூர்த்தி

திரும‌ண‌ம்


அற்புத‌மான‌வ‌ர்க‌ள் திரும‌ண‌மும் அற்புத‌மாகிற‌து. மோச‌மான‌வ‌ர்க‌ள் சேர்ந்தாலோ அது மோச‌மாகிற‌து. ம‌ற்ற‌படி திரும‌ண‌ம் ந‌ல்ல‌தும் அல்ல‌ , கெட்ட‌தும் அல்ல‌
-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ச‌த்குரு ஜ‌க்கி வாசுதேவ்



Marriage means cutting down your freedom;Getting attached legally to a woman/man. But there is nothing higher than Freedom
- Osho



காத‌ல் க‌ல்யாண‌மா நிச்ச‌ய‌க்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌மா என்ப‌தையும் தாண்டி திரும‌ண‌ம் என்ப‌து தேவைதானா அதுவும் இன்றைய‌ நெருக்க‌டியில் அதை க‌டைசிவரை ஜீவிக்க‌ வைத்திருப்ப‌து சாத்திய‌ம்தானா என்ற‌ ஐய‌ப்பாடுக‌ள் ப‌ல இருந்தும் நாமெல்லாம் அதை விட்டு விலகாம‌ல் அல்ல‌து அதை தெரிந்துகொள்ள‌ முய‌ற்சிக்காம‌ல் த‌டால‌டியாக‌ அந்த‌ மாய‌ சுழ‌லில் சிக்குவதே ஒரு விசித்திர‌ம்.

ஆண்க‌ளுக்கு க‌ல்யாண‌ம் என்ப‌து அடிப்ப‌டையில் ஒரு உட‌ல் தேவை, அந்த‌ தேவையிலே ப‌ல‌ர் நின்று விடுவதால் அதை தாண்டிய‌ ப‌ல‌ உன்ன‌த‌ங்க‌ள் புரிப‌டுவ‌தில்லை. பெண்க‌ளுக்கு அது ஒரு பாதுகாப்பு அந்த‌ பாதுகாப்பு கிடைக்காத‌ ப‌ட்ச‌த்தில் அல்ல‌து தேவைப‌டாத‌ ப‌ட்ச‌த்தில் அதில் இருந்து வெளியேறும் வ‌ழி அன்றைய‌ கால‌ கட்ட‌த்தை போல‌ல்லாம‌ல் இன்று எல்லா திசைக‌ளிலும் திற‌ந்திருக்கிற‌து.

இந்த‌ குழ‌ப்ப‌ங்க‌ளோடு கால‌ குழ‌ப்ப‌ங்க‌ளும் கலாச்சார‌ குழ‌ப்ப‌ங்க‌ளும் வேறு.இந்த‌ கால‌கட்ட‌த்தில் ஆண்க‌ளின் உல‌க‌மும் பெண்க‌ளின் உல‌க‌மும் இரு வேறு திசைக‌ளில் ப‌ய‌ண‌ப்ப‌ட்டிருப்ப‌தாய் தோன்றுகிற‌து. அதில் ப‌ய‌ணம் செய்யும் ஆணும் பெண்ணும் திரும‌ண‌ம் செய்து அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு ந‌க‌ர‌ எத்த‌னிப்ப‌து பெரும் ஆச்ச‌ரிய‌மே.

வ‌யிற்றில் ப‌ட்டாம்பூச்சி ப‌ற‌ப‌ற‌க்க‌ காத‌லை சொல்லி அல்ல‌து ம‌ண‌ப்பெண்/ம‌ண‌ம‌க‌ன் பார்த்து க‌ல்யாண‌மெனும் அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு ந‌க‌ரும்

ஆண்:
1) வேலை/தொழில்
2) ந‌ண்ப‌ர்க‌ள்
3) வார‌ விடுமுறை கொண்டாட்ட‌ங்க‌ள்

பெண்:
1) வீடு வாங்குத‌ல்/க‌ட்டுத‌ல்
2) குடும்ப‌ ந‌ல‌ன்
3) பிள்ளைக‌ளின் அதீத‌ எதிர்கால‌ க‌ன‌வு
4) மேற்சொன்ன‌வைக‌ளை அடைய‌ க‌ண‌வ‌ணை ச‌ரிக‌ட்டும் உத்திக‌ள்

என‌ மாறிவிட்டார்க‌ள்.

மேற்சொன்ன‌வைக‌ளில் அட‌ங்காத‌ ஆண் தஞ்சாவூர் த‌லையாட்டி பொம்மைக‌ள் எனும் அடை மொழியோடும்,பெண் முர‌ட்டுதன‌மாக‌ அட‌க்கி வைக்க‌ப்ப‌ட்டும் ச‌மூக‌ பார்வையில் ச‌கிப்புத‌ன்மை என்று பெய‌ரிட்டு வாழ்கிறார்க‌ள். ஒரு குறிப்பிட்ட‌ கால‌ க‌ட்ட‌த்திற்கு பிற‌கு திரும்பி பார்க்கும்போது எதுவோ தொலைந்த‌தாய் திகைத்துப்போகிறார்க‌ள்

அப்புற‌ம் என்ன‌ அது ஆங்…..காத‌ல்…காத‌ல் அது எங்கோ ம‌ங்க‌லாக‌ தேய்ந்து அழிந்துகொண்டிருப்ப‌தாக‌வே தோன்றுகிற‌து. இனி வ‌ருங் கால‌கட்ட‌ங்க‌ளில் கால‌ம் ம‌னித‌னை க‌ல்யாண‌த்தைவிட்டு ஒதுக்கி வைக்கும் என்றே தோன்றுகிற‌து