Thursday

நோயாளிக்கு ஒரு அட்வைஸ்

நோயாளிக்கு ஒரு அட்வைஸ் இன்னைக்கு இருக்கிற நிலைமையில் யார்ற்கு என்ன நோய் வரும் என்பது யார்க்கும் தெரியாது .
ஒரு தலைவலி வந்தா யாராவதுகிட்ட சொன்ன போதும் அட இந்த வயசில் ஏப்படி உனக்கு மட்டும் தலைவலி வருது என்னக்கு பொறு ஒண்ணுமில்லை 
அட உனக்கு மட்டும் ஏப்படி பல்வலி வருது  உனக்கு மட்டும் ஏப்படி சளி பிடிக்குது 
உனக்கு மட்டும் ஏப்படி சுகர் வருது அட பாவிகளா நோய் என்பது ஒவொரு உடம்புக்கு த்க்குந்தபடி வரும் இதல்லாம்  ஜீன்ஸ் (மரபணு )பண்ற வேலை அவன் உணவு சார்ந்த பழக்கம் இன்னும் நிறைய இருக்கு .

Friday

History of Telescope

தூரத்தில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவும் டெலஸ்கோப், 1608-ல் ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற டச்சுக்காரரால் உருவாக்கப்பட்டது. 1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலைநோக்கிகளும், பைனாகுலர்களும் இதன் வழி வந்தன.

18-ம் நூற்றாண்டில், கண்ணாடி அணிவதற்குப் பதில் சிறிய தொலைநோக்கியைச் சிலர் தூக்கித் திரிந்தனர். நுண்ணிய பொருளை பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ரோஸ்கோப்) டச்சு கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென் 1590-ல் கண்டுபிடித்தார்.

கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க மைக்ரோஸ்கோப் போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டின் மத்தியில், டச்சு நாட்டுக் கண்ணாடிப் பொருள் தயாரிப்பாளரான அண்டன் லீவென்குக், மைக்ரோஸ்கோப்பில் பாக்டீரியாவையே பார்க்கும் அளவுக்கு மேம்படுத்தினார்.

ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார். இதே காலகட்டத்தில், பிரிட்டடிஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக் “மைக்ரோகிராபியா” என்ற நூலை வெளியிட்டார்.

அதில் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதன்பின் மைக்ரோஸ்கோப் பிரபலமானது. நுண்ணுயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதே முக்கியமான காரணம்.

MicrosoftOffice Vs Google Docs

ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசையையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் பதிலுக்கு, இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.