‘‘ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றி நின்றே பல ஊழிகள் கண்டேனே’’
‘‘எனது அறிவு எங்கேயெல்லாமோ, ஓடி ஓடித் திரிந்து கொண்டிருந்தது. முயற்சி செய்து அதை என்னோடு நிற்க வைத்தேன். என்னோடு ஒன்றாகிப் போன அறிவை, எனது உள்ளே செலுத்தி நோக்கினேன். பரம்பொருள் அனுபவம் கிடைத்தது. அத்துடன் திருவருளின் தன்மையும் புலப்பட்டது. எனது உலக வாழ்க்கையும், ஆன்ம வாழ்க்கையும், பயனுள்ள வகையில் நடப்பதற்கான உண்மை அறிவும் என்னுள்பட்டது. அந்த அறிவு, திருவருளால் நான் பெற்ற அறிவு. அது இறைவனிடமிருந்து வந்தது. ஆகையாலே, உணர்ந்தேன் என்று சொல்வதே பொருத்தமாகும். இது எனக்கு, நினைத்த மாத்திரத்தில் கிடைத்து விடவில்லை. இந்த உணர்வினைப் பெறுவதற்கு நான் பல பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தது!’’ என்கிறார்.