Showing posts with label Google Docs. Show all posts
Showing posts with label Google Docs. Show all posts

Friday

MicrosoftOffice Vs Google Docs

ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசையையும் பயன்பாட்டு வழியையும் கூகுள் வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் பதிலுக்கு, இணையம் இணைந்த ஆபீஸ் மற்றும் பிற வசதிகளை அளிக்கும் வகையில் ஆபீஸ் 365 என்ற ஒரு இயக்கத்தினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.