Wednesday

காலக்கண்ணாடி



2008

* தமிழகத்தில் மின்னணு கருவிகள் (electronic appliances) வாங்கினால் தமிழிலேயே நம் மக்களுக்கு எளிதாகப் புரியும் இடைமுகத்துடன் (interface) கிடைக்கின்றன.
* கணினியில் பயன்படுத்தத் தேவைப்படும் மென்பொருட்கள் அனைத்தும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவர் கூட பயன்படுத்தும் வகையில் கிடைக்கின்றன.
* தமிழ் மாணவர் எவரும் ஆங்கில அறிவுக் குறைவால் வாய்ப்பை இழக்கும் நிலை மாற ஆரம்பிக்கிறது.

2010

* தமிழில் அறிவுக் கருவூலங்கள் (encyclopedia) பெருகி, யாரும் தமிழ் வழியே உலகின் அறிவுச் செல்வங்களை அணுகலாம் என்ற நிலைமை.
* தமிழக அரசுப் பணிகள் யாவும் தமிழிலேயே நடைபெறுகின்றன. தகவல் இணைப்புகளால் அரசு அலுவல்களில் கால தாமதம், ஊழல் புரிவதற்கான வாய்ப்புகள் ஒழிந்து போகின்றன.
* கடலுக்குப் போகும் மீனவர்களும், பயிர் போடும் விவசாயிகளும் தமக்கு வேண்டிய விபரங்களைத் திரட்டவும், தமது அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
* வீட்டு செலவுக் கணக்குக்கும், கடைகளில் விற்பனைக் கணக்கும், செய்தித்தாள் போடுபவரின் கணக்கும், பால் கணக்கும் கணினிகளின் மூலம் செய்து கொள்ள முடிகிறது.
* தமிழ் மருத்தவர்களும், தமிழ் பொறியாளர்களும், தமிழ் வணிகர்களும், வழக்கறிஞர்களும் தமது ஆவணங்களையும் (documents), குறிப்புகளையும் (records) முழுமையாகப் பதிவு செய்து தரமான சேவை வழங்க முடிகிறது.
* படித்த இளைஞர்கள் யாவருக்கும் நமது சமூகத்திலேயே உலகத் தரத்திலான வேலை வாய்ப்புகளும், ஊதியமும் கிடைக்கிறது.

2020

* ஆப்பிளின் iPod போல, மைக்ரோசாப்டின் விண்டோசு போல், லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகையே மாற்றி அமைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு (inventions) தமிழகம் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது.
* மரபணு ஆராய்ச்சிகள், இயற்பியலின் முன்னணி பணிகள் தமிழகத்தின் பல்கலைக் கழகங்களில் தமிழிலேயே நடைபெறுகிறது.
* உயர்தர திரைப்படங்கள், உலகே வியக்கும் கலைப் படைப்புகள் தமிழகத்தில் உருவாகின்றன.
* தரமான சாலைகள், உயர்வான பொதுச் சேவைகள், எல்லோருக்கும் மருத்துவ வசதி, இயலாதவருக்கு சமூக ஆதரவு என்று எல்லோரும் எல்லாமும் பெற்றுள்ள சமூகமாக தமிழகம் உலகுக்கே வழி காட்டுகிறது.

No comments: