
அற்புதமானவர்கள் திருமணமும் அற்புதமாகிறது. மோசமானவர்கள் சேர்ந்தாலோ அது மோசமாகிறது. மற்றபடி திருமணம் நல்லதும் அல்ல , கெட்டதும் அல்ல
-சத்குரு ஜக்கி வாசுதேவ்
Marriage means cutting down your freedom;Getting attached legally to a woman/man. But there is nothing higher than Freedom
- Osho
காதல் கல்யாணமா நிச்சயக்கப்பட்ட திருமணமா என்பதையும் தாண்டி திருமணம் என்பது தேவைதானா அதுவும் இன்றைய நெருக்கடியில் அதை கடைசிவரை ஜீவிக்க வைத்திருப்பது சாத்தியம்தானா என்ற ஐயப்பாடுகள் பல இருந்தும் நாமெல்லாம் அதை விட்டு விலகாமல் அல்லது அதை தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் தடாலடியாக அந்த மாய சுழலில் சிக்குவதே ஒரு விசித்திரம்.
ஆண்களுக்கு கல்யாணம் என்பது அடிப்படையில் ஒரு உடல் தேவை, அந்த தேவையிலே பலர் நின்று விடுவதால் அதை தாண்டிய பல உன்னதங்கள் புரிபடுவதில்லை. பெண்களுக்கு அது ஒரு பாதுகாப்பு அந்த பாதுகாப்பு கிடைக்காத பட்சத்தில் அல்லது தேவைபடாத பட்சத்தில் அதில் இருந்து வெளியேறும் வழி அன்றைய கால கட்டத்தை போலல்லாமல் இன்று எல்லா திசைகளிலும் திறந்திருக்கிறது.
இந்த குழப்பங்களோடு கால குழப்பங்களும் கலாச்சார குழப்பங்களும் வேறு.இந்த காலகட்டத்தில் ஆண்களின் உலகமும் பெண்களின் உலகமும் இரு வேறு திசைகளில் பயணப்பட்டிருப்பதாய் தோன்றுகிறது. அதில் பயணம் செய்யும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து அடுத்த கட்டத்திற்கு நகர எத்தனிப்பது பெரும் ஆச்சரியமே.
வயிற்றில் பட்டாம்பூச்சி பறபறக்க காதலை சொல்லி அல்லது மணப்பெண்/மணமகன் பார்த்து கல்யாணமெனும் அடுத்த கட்டத்திற்கு நகரும்
ஆண்:
1) வேலை/தொழில்
2) நண்பர்கள்
3) வார விடுமுறை கொண்டாட்டங்கள்
பெண்:
1) வீடு வாங்குதல்/கட்டுதல்
2) குடும்ப நலன்
3) பிள்ளைகளின் அதீத எதிர்கால கனவு
4) மேற்சொன்னவைகளை அடைய கணவணை சரிகட்டும் உத்திகள்
என மாறிவிட்டார்கள்.
மேற்சொன்னவைகளில் அடங்காத ஆண் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் எனும் அடை மொழியோடும்,பெண் முரட்டுதனமாக அடக்கி வைக்கப்பட்டும் சமூக பார்வையில் சகிப்புதன்மை என்று பெயரிட்டு வாழ்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு திரும்பி பார்க்கும்போது எதுவோ தொலைந்ததாய் திகைத்துப்போகிறார்கள்
அப்புறம் என்ன அது ஆங்…..காதல்…காதல் அது எங்கோ மங்கலாக தேய்ந்து அழிந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. இனி வருங் காலகட்டங்களில் காலம் மனிதனை கல்யாணத்தைவிட்டு ஒதுக்கி வைக்கும் என்றே தோன்றுகிறது
No comments:
Post a Comment