Friday

Julian Assange Appeals Extradition

"எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படிஎனக்குத்தோன்றியது தான் விக்கிலீக்ஸ்" - ஜூலியன்.

விக்கி லீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்கே (37). ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அமெரிக்காவின் ராணுவம் மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 
இந்த நிலையில் சுவீடன் சென்று இருந்தபோது பெண்களை கற்பழித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் சுவீடன் போலீசார் கோரிக்கை விடுத்தனர்.
 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் அசாங்கே வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் அவரை விசாரணைக்காக சுவீடனுக்கு அனுப்பலாம் என கோர்ட்டு உத்தரவிட் டது. ஆனால் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டில் அசாங்கே அப்பீல் செய்துள்ளார்.
 
இந்த தகவலை அசாங்கேயின் வக்கீல்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். ஆனால், விசாரணைக்கான தேதி இன்னும் முடிவு செய்யப் படவில்லை என கூறினர்.

பெரும் யானையைக்கூட சிறு அங்குசம் ஆட்டி வைக்க முடியும் என்பது போல, உலக அரசுகளை ஆட்டி வைத்திருக்கும் விக்கி லீக்சின் ஜூலியனையும் விக்கிலீக்சையும் முடக்க அமெரிக்கா உள்ளிட்ட பல பெரிய நாடுகள் கடும் முயற்சி செய்கின்றன. இணையதளத்துக்கான சர்வரை ரத்து செய்வது, யாரும் விக்கிலீக்சுக்கு இணைய வழியே பணம் நன்கொடை செலுத்தவிடாமல் தடுப்பது என்று எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பயன் தரவில்லை.

ஜூலியனும் விக்கிலீக்சும் பெரும் ஸ்தாபனங்கள் அல்ல. மொத்தம் ஐந்து பேர்தான் இதில் முழு நேர ஊழியர்கள். எண்ணற்ற ஆதரவாளர்கள். விக்கி லீக்சின் இணையதளத்தை ஒரு நாட்டிலிருந்து செயல்படவிடாமல் தடுத்தால் இன்னொரு நாட்டில் இருந்து உடனடியாக இயங்கக்கூடிய அளவுக்குத் தயார் நிலையில் எப்போதும் விக்கிலீக்ஸ் இருந்து வருகிறது

No comments: