Friday

தமிழர்களின் வரலாறு தொடர்ச்சி ........

அவை அடிப்படை மனிதநேயம் சார்ந்த பலரது நிலைப்பாடுகளில் மாற்றுக் கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தாலும், காலத்தின் தேவை என்பதும், ஒடுக்கப்படும் உயிரின எழுச்சிகளின் வரலாற்றில் தவிர்க்க இயலாதது என்பதும் உலக இயங்கியல் என்கிற அறிவியல் கோட்பாடுகளை ஆழ்ந்து படிப்பவர்களும், விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்பவர்களும் நன்கு அறிவார்கள்.

புலிகளைப் பற்றிய கடும் மரண அச்சத்துடன் இலங்கை படையணி வீரர்களும், இலங்கை ராணுவ தாக்குதல்களைப் பற்றிய கடும் அச்சத்துடன் தமிழ்த் தேசிய இனமும் ஒரு இக்கட்டான அரசியல் மற்றும் நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், மரணம் என்பதும் வேதனை என்பதும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவும், அவற்றை உறுதி செய்ய எம் எதிரிகளும் துயர் கொள்ளக் கூடாது என்கிற உயரிய போர்முறைகளை, மனித நேயம் சார்ந்த பல்வேறு கட்டுப்பாடுகளை விடுதலைப்புலிகள் வைத்திருக்கிறார்கள் என்பதும், பல்வேறு உலக நாடுகளின் அமைதிக் குழுக்களுக்கும், உலகளாவிய ஊடகவியலாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் அமெரிக்காவில் " HOUSE INTERNATIONAL RELATIONS" என்கிற ஒரு அமைப்பு, நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் மேம்பாடுகள் குறித்த ஒரு கூட்டத்தைக் கூட்டியது. இதில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக அதன் செயலர் திரு.டொனல்ட் கேம்ப் (MR.DONALD CAMP) பேசினார், வழமை போல தீவிரவாதம் குறித்த அவரது உரையின் நடுவே குறுக்கிட்டுப் பேசிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர், (அதாவது காலிபோர்னியா மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட அமெரிக்கக் காங்கிரஸ் செனட் உறுப்பினர்) திரு.பிராட் சார்மேன் (MR.BRAD SHERMAN) பல்வேறு கேள்விகளுக்கு நடுவே ஒரு ஆய்வுக்குரிய கேள்வியைக் கேட்டார், அந்தக் கேள்வி " பயங்கரவாதத் தாக்குதலுக்கும், சட்டபூர்வமான கெரில்லாத் தாக்குதலுக்கும் என்ன வேறுபாடு?", இதைக் கூட விட்டு விடலாம், இன்னொரு மிக அழகான கேள்வியையும் அவர் கேட்டார், அந்தக் கேள்வி "அல் கொயதாவிர்க்கும் அமெரிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்கேற்ற எங்கள் ஜார்ஜ் வாஷிங்க்டனுக்கும் என்ன வேறுபாடு? உங்கள் பார்வையில் அவரும் ஒரு பயங்கரவாதியா? இந்தக் கேள்வியைக் கண்டு நிலை குலைந்து போன திரு.டொனல்ட் கேம்ப் (MR.DONALD CAMP), பதில் அளிக்க இயலாமல் குழம்பிய காட்சியை நீங்கள் அனைவரும் இணையங்களில் கூடக் கண்டடையலாம்.
இன்றைக்கு தமிழகத்தில், உருவாகி இருக்கும், எழுச்சி அலையானது, ஈழத்தில் துயருறும் எம் தமிழ்மக்களை மட்டுமன்றி, அரசியல் அறிவற்று, அன்றாட வாழ்வியல் போராட்டங்களில் கணந்தோறும் உழைக்கும் வர்க்கத்தில் உறைந்து போயிருக்கும் சிங்களபேரினத்தின் மக்களும் அமைதியை அடையட்டும், மனிதம் தழைக்கப் பிறந்த தமிழனின் பெருமையை சிங்களனும் உணரட்டும் என்று ஒரு உணர்வுள்ள தமிழனாக உங்கள் சார்பில் மனிதச் சங்கிலியின் ஒரு ஓரத்தில் நின்றிருப்பேன். என்னைத் தேடாதீர்கள், நீங்கள் தான் நான்.

விடுதலைப்புலிகள் உண்மையில் தீவிரவாதிகளா? நீங்கள் தான் சொல்ல வேண்டும் தமிழர்களே......

No comments: