Friday

தமிழர்களின் வரலாறு தொடர்ச்சி .....

தமிழ் இளைஞர்கள் 1968 களில் தங்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக ஆயுதம் ஏந்த வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள், தொடர்ந்து தற்காப்பு மற்றும் இன ஒடுக்கலுக்கு எதிரான நிலைப்பாடுகளில் பல்வேறு குழுக்களாக இயங்கிய ஆயுதப் போராட்டக் குழுவினர், "கருப்பு ஜூலை" என்று இலங்கை வரலாற்றில் மட்டுமன்றி மனித சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு அவல நிலையான வெறிகொண்ட பேரினவாதத் தாக்குதலை சந்தித்த பின்பு ஒரு மிகப் பெரும் எழுச்சியை போராட்ட நிலைப்பாடுகளில் கண்டது, தமிழ் மக்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார்கள், தந்தையின் எதிரில், கணவன்மாரின் எதிரில் எம்குலப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள், எம் தமிழ்க் குழந்தைகள் ராணுவ வீரர்களால், கால்களைப் பிடித்துக் கொண்டு சாலைகளில் துவைத்து மண்டையைப் பிளந்து கொல்லப்பட்டார்கள். குழுக்கள், குழுக்களாக எம் தமிழ்மக்கள் எரித்துப் படுகொலை செய்யப்பட்டார்கள். இவற்றை எல்லாம் பார்த்துக் கொதித்தெழுந்த தாய்த் தமிழ் மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை இந்திய பார்ப்பனீய மேலாதிக்க அரசுகளுக்குக் கொடுத்த போதுதான், இந்திய அரசும், தமிழக அரசும், தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக அவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களையும், உதவிகளையும் செய்தார்கள். அதன் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் பதிவுகளும், கொடுமைகளும் நமக்குத் தெரியும் என்பதாலும், நீண்ட நெடிய துயரம் மட்டுமே அவற்றில் தோய்ந்து இருக்கும் என்பதாலும் அவற்றை பிறிதொரு காலத்தில் விரிவாகப் பதிவு செய்ய முனைகிறேன்.

காலத்தின் கட்டாயத்தால் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த தமிழ் இளைஞர்கள், வேறுவழியின்றி ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டார்கள், வெவ்வேறு குழுவாக பிரிந்து கிடப்பது, விடுதலை இயங்கியல் போராட்ட வரலாற்றை நீர்த்துப் போகச் செய்யும் என்கிற சமூக அறிவியல் உண்மையை உணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பல்வேறு போராட்டக் குழுக்களை ஒருங்கிணைக்க முயன்றார் அல்லது வேறு வழியின்றி ஒழித்தார்.

No comments: