Friday

தமிழர்களின் வரலாறு தொடர்ச்சி .......

1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய ஒரு தேர்தல் சூழலில் தான் " தந்தை செல்வா" என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு.S.J.V செல்வநாயகம் "தமிழரசுக் கட்சி" என்கிற ஒரு அரசியல் நகர்வை தேர்வு செய்து பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறார், ஒருதலைப் பட்சமான இலங்கை அரசின் பேரினவாத நடவடிக்கைகளைக் கண்டித்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உதறித் தள்ளிய தந்தை செல்வா, ஒரு இடைத் தேர்தலை சந்தித்து தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவில் மிகப்பெரும் வெற்றி அடைகிறார், வெற்றி அடைந்தது மட்டுமன்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் " தமிழ் மக்கள் தனியானதொரு ஆட்சியைப் பெறுவதைத் தவிர வேறு வழியற்ற நிலைக்கு சிங்களப் பேரினவாத அரசால் தள்ளப்பட்டிருக்கிறார்கள் " என்று கர்ஜனை செய்கிறார்.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த இலங்கை தமிழ் மக்களும், அரசியல் இயக்கங்களும் இணைந்து " தமிழர் விடுதலைக் கூட்டணி" என்கிற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி தங்கள் அரசியல் களங்களை வலிமைப் படுத்திக்கொண்டார்கள், தொடர்ந்த பல்வேறு அரசியல் ஒருங்கிணைவுகளில் 1977 பாராளுமன்றத் தேர்தல்களில் அதிகப்பட்சமாக 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு, தமிழீழம் என்கிற பாதையை நோக்கியே நாங்கள் செல்கிறோம் என்பதையும், அதனை அமைதி வழியிலோ இல்லை போராட்ட வடிவிலோ பெற்றே தீருவது என்கிற முடிவுக்கு வந்தார்கள். இதுதான் வரலாற்று உண்மை.

இன்று பார்ப்பன, பேரினவாத அரசுகளும் உலக ஏகாதிபத்தியங்களும் ஊடகங்களில் பரப்பும், "ஆயுதம் தாங்கிய புலிகள் அமைப்பு" 1980 களில் தான் " தமிழீழம்" என்கிற ஒரு கோரிக்கையை முன்னெடுத்தது என்பது ஒரு வரலாற்றுத் திரிப்பு மட்டுமன்றி, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விடுதலை உணர்வை எள்ளி நகையாடும் ஒரு பித்தலாட்டம் என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தொடர்ந்து கூற்றியல் நோக்கில் ஆய்வு செய்யும் எவரும் ஒப்புக் கொள்வார்கள்.

No comments: